/* */

இராமநாதபுரத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆட்சியர், எஸ்.பி ஆய்வு

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி தலைமையில் அதிகாரிகள் குழு, பொதுமக்கள் கூடும் இடங்கள்,பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆட்சியர், எஸ்.பி ஆய்வு
X

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள் குழு, பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் நோய்த்தொற்றின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர், சுகாதாரத்துறை குழு, கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்படி, பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், உணவு விடுதிகள், சாலையோர கடைகள், வாகன ஓட்டிகள், பயணிகள் உள்ளிட்டோர்களிடம் கொரோனா தொற்றின் தாக்கத்தையும், அதனை எதிர்கொள்ள மக்கள் போதிய விழிப்புணர்வுடனும், பாதுகாக்கப்பாகவும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு செய்தனர்.

அதேபோல வாகன ஓட்டிகள், நடத்துனர் ஆகியோரிடம், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருந்திருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், கைகளை கிருமி நாசினி மூலம் கழுவி சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 50% பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல அனைவரும் தடுப்பூசிகளை கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறும், செலுத்தாதவர்கள் சிறப்பு தடுப்பு ஊசி முகாம்களில் செலுத்திக் கொள்ளும் மாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோல தாங்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் வசிக்கும் பகுதிகளை சுத்தமாகவும், பாதுகாப்போடும் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினர்.

Updated On: 6 Jan 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’