/* */

கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகை

நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

HIGHLIGHTS

கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகை
X

தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ள நிலையில், தற்போது 4 மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 18 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்னனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கை தமிழர்கள் தங்களது உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு வந்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.

அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைப்பர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை ஆறு மணிக்கு மன்னார் மாவட்டம் பேசாளை கடற்கரையிலிருந்து இரண்டு படகுகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப், கஸ்தூரி, சுமித்ரா, நகுஷன், பியோனா, நகுலேஸ்வரன் என நான்கு மாத கர்ப்பினி பெண், ஒன்றரை வயது சிறுவன் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 இலங்கை தமிழர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து இறங்கினர்.

இதேபோல் நேற்று மதியம் யாழ்பாணம் மாவட்டம் நீர்வேலி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பேச்சாலை கடற்கரையில் இருந்து புறப்பட்டு இராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை வந்தடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இராமேஸ்வரம் மரைன் போலீசார். இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே தனது நான்கு மாத கர்ப்பிணி மனைவிக்கு பாதுகாப்புடன் குழந்தை பிறப்பதற்காக தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர் நகுஷன் தெரிவித்துள்ளார்.

தற்போது பால்மாவு மற்றும் கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தனது ஒன்றரை வயது குழந்தையை வைத்து இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் தமிழகத்திற்கு குடும்பத்துடன் அகதியாக வந்ததாக குழந்தையின் அப்பா பிரதீப் தெரிவித்தார். பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு பின் இந்த 18 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள். மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இன்று வரை 60 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 April 2022 2:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?