/* */

வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி

வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி
X

இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது.

வரும் சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குகளை பதிவு செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், இன்று இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆபிசில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் இந்திய வரைபடம் அடங்கிய ரங்கோலி கோலம் பிரமாண்டமாக வரையப்பட்டிருந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய ரங்கோலி கோலமிட்டனர்.

இந்த போட்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ராமநாதபுரம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மகளிர் திட்டத்திற்கான மகளிர் குழுக்களை இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட எஸ்பி., கார்த்திக் மற்றும் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் விளம்பர வாகனத்தையும் பார்வையிட்டனர்.

Updated On: 10 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்