/* */

இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத்தொடர் சேமிப்புக் கணக்கை தொடங்க முதல்வர் வலியுறுத்தல்

உலக சிக்கன தினத்தையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச்செய்தியில் மக்களிடம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்

HIGHLIGHTS

இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத்தொடர் சேமிப்புக் கணக்கை தொடங்க  முதல்வர் வலியுறுத்தல்
X

பைல் படம்

உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெ ய்யும் பொருட்டு, இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று,வளமடைந்து வாழ்வாங்கு வாழுமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்ட உலக சிக்கன நாள் வாழ்த்துச்செய்தியில், சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சினய மட்டுமல்ல, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல் பணத்தை பட்டுமல்ல, பொருட்களையும், இயற்கையின் வளங்களையும் பொறுப்புடன் செயவழிப்பதில் சிக்கணம் தொடங்குகிறது "பணத்தைத் தண்ணீராய்ச் செலவழித்தல்' என்கிற உவலிருந்து மாறுபட்டு, "தண்ணீரைப் பணம் போல செலவழிக்கும்' கட்டாயத்தை உலகமே இன்று உணர்ந்திருக்கிறது.

அக்டோபர் 30-ஆம் நாளை உலக சிக்கன நாளாக நம் நாடு கடைப்பிடிக்கிறது. இன்று "குறைந்தபட்சத் தேவைகளுடனான வாழ்க்கை' என்கிற கருத்தியல் விரைவாகப் பரவி வருகிறது. ஒரு பொருளை, 'தேவையா?' என்று பலமுறை சிந்தித்து வாங்குவதில் சிக்கனம் தொடங்குகிறது.

விழிப்புணர்வுடன் வாழ்க்கையை அணுகுகிறவர்கள் குறைந்தபட்சத் தேவைகளை மட்டும் கருத்தில்கொண்டு செலவு செய்கிறார்கள்; வருமானத்தில் பெரும்பகுதியைச் சேமித்து வைக்கிறார்கள். பெறுகிற வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைச் சேமிப்பிற்கும், மூன்றில் ஒரு பங்கை உணவு, உடை போன்றவற்றிற்கும், மூன்றில் ஒரு பங்கைக் கல்வி, பரானிப்பு, வரி போன்றவற்றிற்கும், பத்தில் ஒரு பங்கை கேளிக்கை, பொழுதுபோக்குக்காகவும் யார் செலவழிக்கிறார்களோ, அவர்களே வளமான வாழ்க்கையை வாழ முடியும்.

சேமிப்பே ஒருவர் வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பதும ட்டுமல்ல, அதைச் சரியான விதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். இந்த உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொருட்டு, இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர்சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து வாழ்வாங்கு வாழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உலக சேமிப்பு தினம் உருவான பின்னணி...

சேமிப்பின் அவசியத்தையும், விழிப்புணர்வையும் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக உலக சிக்கன தினம் என்ற ஒன்று நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சொந்த உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத் திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. சிறிய வயதிலிருந்து சேமிக்கும் பழக்கத்தினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாள்காட்டியில் இருக்கக்கூடிய சிறப்பு தினங்கள் பற்றி நாம் அனைவருமே தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலக சிக்கன தினம் ஆண்டுந்தோறும் அக்டோபர் 30-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத்தினதும், சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.

கடந்த 1924-ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு நடைபெற்றது. உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டுமென, உலக சிக்கன தினம் என ஒரு தினம் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது. உலக சிக்கன தினம் முதன்முதலில் இத்தாலியின் மிலான் நகரில் 1924-ம் ஆண்டு முதல் சர்வதேச சேமிப்பு வங்கி காங்கிரசின் போது அனுசரிக்கப்பட்டது. இத்தாலிய பேராசிரியர் பிலிப்போ ரவிசா அக்டோபர் 30 ஆம் தேதியை 'சர்வதேச சிக்கன தினம்' என்று அறிவித்தார். சேமிப்பு, சிக்கனம் போன்றவை பற்றி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பதே இத்தினம் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய நோக்கமாகும்.

சிக்கனமாய் இருப்பதற்கு உணவு உண்ணாமல் இருத்தலோ, நம்முடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றி கொள்ளாமல் இருப்பது சிக்கனம் இல்லை. தேவைகளை அறிந்து வீண் செலவுகளை குறைத்து கொள்வதே சிக்கனமாகும். ஒவ்வொருவரும் சிக்கனத்தை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். வரவிற்கு ஏற்ப செலவு செய்தால் வாழ்க்கையில் சந்தோசம் நிலைக்கும். குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒருவர் மட்டும் சிக்கனத்தை கடைப்பிடித்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியாது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கனத்தை கடைப்பிடித்தால் வாழ்வானது செழிப்பாக இருக்கும்.

Updated On: 29 Oct 2022 12:00 PM GMT

Related News