/* */

ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய சுகாதாரத்துறை அமைச்சர்

அரசின் பல்வேறு திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை ஊராட்சி மன்றதலைவர்கள் தான்செயல்படுத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய சுகாதாரத்துறை அமைச்சர்
X

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஊராட்சித்தலைவருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். உடன் அமைச்சர் எஸ். ரகுபதி, ஆட்சியர் கவிதாராமு. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 56 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொரேனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றி 100% ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை போடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவித்து கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர்.

பின்னர், பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு 100% தடுப்பூசிகளை போட வைத்த ஒரே மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் தான்.அரசின் பல்வேறு திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துச் செல்லும் சிறப்பான பணியை ஊராட்சி மன்ற தலைவர்கள் தான் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.தற்போது வைரஸ் தொற்று மெல்லமெல்ல குறைய காரணம் தமிழக அரசுடன் சேர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் தங்கள் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கை எடுத்ததன் மூலம் தற்போது வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Updated On: 22 Aug 2021 5:29 PM GMT

Related News