/* */

விவசாயம் தொழில் செய்ததற்கு மனைவியின் தாலி தான் மிச்சம்: விவசாயி வேதனை

இந்த ஆண்டு அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது

HIGHLIGHTS

விவசாயம் தொழில் செய்ததற்கு மனைவியின் தாலி தான் மிச்சம்: விவசாயி வேதனை
X

புதுக்கோட்டையில் நேற்று பெய்த கனமழையால் அம்மா பட்டியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது விவசாயி வேதனை

விவசாயத் தொழில் செய்ததற்கு மீதமிருப்பது மனைவியின் தாலி மட்டுமே என விவசாயி வேதனை தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்தது இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக் கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 60 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயி செந்தில்குமார் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக அப்போது பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்தது. சேதமடைந்த நெற்பயிர்கள்க்கு அரசால் நிவாரணம் வழங்குவதற்காக அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து சென்றனர்.ஆனால் தற்போது வரை அந்த நிவாரணம் இது வரை எங்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் விவசாய தொழிலில் ஈடுபட்ட நாங்கள் கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டையில் பெய்த கனமழையின் காரணமாக, இந்த ஆண்டு அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே நாங்கள் மீண்டும் விவசாய தொழிலில் ஈடுபட முடியும். ஏற்கெனவே நாங்கள் விவசாய தொழில் செய்வதற்கு வீட்டில் இருந்த அனைத்து நகைகளையும் மற்றும் கடன்கள வாங்கி விவசாயம் ஈடுபட்டு வந்தோம். ஆனால் தற்போது விவசாயம் செய்ததற்கு மனைவியின் தாலி மட்டுமே மிச்சமானது.

மேலும் இந்த முறையாவது முறையாவது பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வில்லை என்றால் நாங்கள் விவசாய தொழிலை விட்டு விட்டு குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சென்று கூலி வேலை செய்துதான் பிழைப்பு நடத்தவேண்டும். விவசாய நிலங்களை அப்படியே தரிசாகப் போட்டுவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Updated On: 2 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...