/* */

முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இக்கூட்டத்தில் 9 நபர்களுக்கு ரூ.1,63,305 திருமண நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

HIGHLIGHTS

முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

 இக்கூட்டத்தில் 9 நபர்களுக்கு ரூ.1,63,305 திருமண நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகைகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்  கவிதா ராமு வழங்கினார்.

முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் படைவீரர்களின் குறைகளைப்போக்கும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் துக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களின் குறைகளை போக்கும் வகையில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 நபர்களுக்கு ரூ.1,63,305 திருமண நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்களிடமிருந்து விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், விவசாய மின்இணைப்பு வழங்க கோரியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 29 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்நல உதவி இயக்குநர் விஜயகுமார், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2022 8:30 AM GMT

Related News