/* */

உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சர் நம்பிக்கை

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்க உள்ளார்

HIGHLIGHTS

தமிழக முதல்வர் செய்து வரும் சாதனை நடக்கபோகும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றார் சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு 9-ஆவது வார்டு உறுப்பினருக்கு இடைத்தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடக்கிறது இதற்கான தேர்தல் பிரசாரத்தில் திமுக அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு 9-ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனிச்சாமிக்கு ஆதரவாக, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், அம்மாசத்திரம், நார்த்தாமலை, ஊரப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரசாரத்தின்போது அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழக முதல்வர் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார்.இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ள முதல்வருக்கு எல்லாம் முதல்வராக முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.தேர்தல் வாக்குறுதிகளில் 262 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் திட்டத்தை தொடங்க உள்ளார். மேலும் முதியோர் உதவித்தொகை வராதவர்களுக்கு மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார் அமைச்சர்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்று 150 நாட்களை நெருங்கி நிலையில் தமிழக முதல்வர் மிக சிறப்பாக நல்லாட்சி செய்து வருகிறார் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.தமிழக முதல்வர் செய்து வரும் சாதனைகளுக்காக, நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றார்.

பிரசார பயணத்தில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கேகே செல்லபாண்டியன், திமுக நிர்வாகிகள் தென்னலூர் பழனியப்பன், ஒன்றிய செயலாளர் சந்திரன், எம்எம் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2021 9:36 AM GMT

Related News