/* */

பணி நியமன ஆணை: தமிழக முதல்வருக்கு வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சான்றிதழ்கள் சரிபார்த்தும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

HIGHLIGHTS

பணி நியமன ஆணை:   தமிழக முதல்வருக்கு  வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாவட்ட வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள்

வேலையில்லா இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலையில்லா இடைநிலை ஆசிரியர் நலச் சங்கத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. ஆனால். 10 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட, இதுவரை பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்து தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், எங்களைப் போல் உள்ள வேலை இல்லா இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்ட பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டுமென்று, வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சகாயராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், வேலையில்லா இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பின்னர், ஆசிரியர் தகுதித் தேர்வான ஸ்லட் தேர்வு வந்ததால், எங்களைப் போல உள்ளவர்கள், அந்தத் தேர்வுகளில் சரியான முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஏனென்றால், நாங்கள் ஆசிரியர் படிப்பு முடித்து 17 ஆண்டு காலம் ஆகிவிட்ட சூழ்நிலையில், திடீரென ஆசிரியர் தகுதி வைப்பதால் எங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் அந்தத் தேர்வுகளை சுலபமாக கையாண்டு தேர்ச்சி பெற்று பணிக்கு சென்று விட்டனர்.

எனவே, தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக ஒரு பெற்றுள்ள இந்த ஆட்சிக் காலத்திலாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலை இல்லாமல் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டு வரும் எங்களைப் போல இருக்கும் வேலை இல்லா இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்ட பணிமூப்பு அடிப்படையில், சிறப்பு கவனம் செலுத்தி முன்னுரிமை அளித்து பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.


Updated On: 24 Aug 2021 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்