/* */

தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Bus News Today -தீபாவளி முடிந்து அவரவர் ஊர்களுக்கு செல்ல 24.10.2022 25.10.2022 , 26.10.2022 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X

பைல் படம்

Bus News Today -புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எளிதாக பயணம் செய்யும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப் பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிக ளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது. இந்த அரசுப் போக்குவரத்து கழகத்திலேயே மிகப் பெரிய மண்டலம் அரசுப் போகுக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் ஆகும். இந்த மண்டலம் தான் தென்னிந்தியா விலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழக மண்டலம் ஆகும். இந்த மண்டலம் சுமார் பன்னிரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும். மொத்தம் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

24.10.2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 21.10.2022, 22.10.2022 , 23.10.2022 ஆகிய நாட்களிலும்.

மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 21.10.2022 முதல் 23.10.2022 வரையும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அணைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் 21.10.2022 முதல் 23.10.2022 வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம்,அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளது.

மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 24.10.2022 25.10.2022 , 26.10.2022 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கும்பகோணம்) லிட்., மேலாண் இயக்குநர் .எஸ்.இராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Oct 2022 4:40 AM GMT

Related News