/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை  மறியல் போராட்டம்.
X

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சாலை மறியலும்,புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க, உள்ளிட்ட கட்சிகள், சி.ஐ.டி.யு, தொ.மு.ச, ஆகிய பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைப்பு கூட்டு குழுவினர் பங்கேற்றனர்.

விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மின்சார ஒழுங்கு முறை மசோதாவை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல்-டீசல் கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டதால் இந்த போராட்டம் நடந்தது.

இதே போன்று மாவட்டத்தில் பாடாலூர், குன்னம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 27 Sep 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!