/* */

பெரம்பலூரில் நிவாரணநிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி, அமைச்சர் தொடங்கிவைத்தார்

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் கொரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் நிவாரணநிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி, அமைச்சர் தொடங்கிவைத்தார்
X

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் கொரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார். அருகில் எம்எல்ஏ பிரபாகரன்.

பெரம்பலுூர் மாவட்டம் துறைமங்கலத்தில் கொரோனா நிவாரணம் 2 ஆம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் வழங்கும் பணியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை வகித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 282 நியாய விலைக் கடைகளில் மூலம் மளிகை தொகுப்பு பொருட்கள் மற்றும் ரூ.2000 நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பெரம்பலூர் வட்டத்தில் 49,759 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 49,172 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், குன்னம் வட்டத்தில் 49,884 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆலத்தூர் வட்டத்தில் 35,878 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தமாக 1,84,693 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.36.95 கோடி மதிப்பீட்டில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகையும், 14 வகையான மளிகை பொட்கள் அடங்கிய தொகுப்புகளும் வழங்கப்பட்ட உள்ளது.

துறைமங்கலத்தில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சி.ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.செல்வகுமரன் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jun 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’