/* */

பெரம்பலூர் : மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்பு

முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் விதமாக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

பெரம்பலூர் : மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்பு
X

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர்.

ஜனவரி 30ஆம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதன்படி, இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம் வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்.

அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன் என மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் விதமாக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தி.சுப்பையா, தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!