/* */

பெரம்பலூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 267 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 267 மனுக்கள் பெறப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 267 மனுக்கள்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  க 267 மனுக்கள் பெறப்பட்டது.

திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக திறந்தவெளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்து வந்தும் மனுக்களை மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 267 மனுக்கள் பெறப்பட்டது.

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ம.பாரதிதாசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ்.சரவணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Dec 2021 4:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்