/* */

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் ஏராளமானவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
X

முகாமில் பங்கேற்ற பெண் ஒருவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம்,செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன் தனியார் கண் மருத்துவ மனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா முகாமினை தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் கண்புரை,கண் நீர் அழுத்த நோய்,குழந்தைகளின் கண் நோய் உள்ளிட்ட பல்வேறு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த முகாமில் செட்டிகுளம்,நாட்டார்மங்கலம்,கூத்தனூர்,ஆலத்தூர்கேட்,பாடாலூர்,பெரகம்பி,குரூர்,சிறுவயலூர்,பொம்மனப்பாடி,சத்திரமனை,நக்கசேலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இம்முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார்,உதவி திட்ட அலுவலர் கலைமணி,மாவட்ட தொற்றா நோய் அலுவலர் விவேக் ஆனந்தன்,மருத்துவர்கள் நிர்மலாதேவி,சூர்யா மற்றும் செவிலியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி வளாகத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மரக்கன்று நட்டார்.

Updated On: 10 Oct 2021 2:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?