/* */

பெரம்பலூர் சுற்றுப்பகுதிகளில் விளம்பரபதாகை, (பிளக்ஸ் போர்டு) பேனர்கள் அகற்றம்

(பிளக்ஸ் போர்டு) பேனர்கள் வைத்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என துணைகாவல் கண்காணிப்பாளர் சரவணன் எச்சரிக்கை.

HIGHLIGHTS

பெரம்பலூர் சுற்றுப்பகுதிகளில் விளம்பரபதாகை, (பிளக்ஸ் போர்டு)  பேனர்கள் அகற்றம்
X

பெரம்பலூர் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விளம்பரபதாகை (பிளக்ஸ் போர்டு) பேனர்களை காவல்துறையினர்னள் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

பெரம்பலூர் நகர் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பர பதாகைகள் வைப்பதால், பாதுகாப்பின்றி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் விளம்பர பதாகை வைப்பதற்கு தடை விதித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்படி பெரம்பலூர் நகர் மற்றும் சுற்றுப் பகுதியில், விளம்பரப் பதாகைகள் பேனர் வைப்பதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜூலை 21ம் தேதியான இன்று விளம்பர பதாகைகள் பெரம்பலூர் நகர் பகுதியில் பேனர்கள், விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணி நடைபெற்றது. பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் மேம்பாலத்தில் ஒட்டப்பட்டிருந்த மிக நீண்ட பேனரை கிரேன் உதவியுடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோபிநாத் முன்னிலையில் அகற்றப்பட்டன. மேலும் அனைத்துக் கட்சிகள் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

Updated On: 21 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி