/* */

குறை தீர்க்கும் கூட்டத்துக்கு கைலி அணிந்து வந்த விவசாயியால் பரபரப்பு

பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கைலி அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குறை தீர்க்கும் கூட்டத்துக்கு கைலி அணிந்து வந்த விவசாயியால் பரபரப்பு
X

பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு  கைலி  அணிந்து வந்த விவசாயி லோகநாதன்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள்,விவசாயிகள் என 100 க்கும் மேற்பட்டோர் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்ற விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்தார்.2020-2021 ஆண்டில் மக்காச்சோள பயிருக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்திருந்தும் காப்பீடு கிடைக்காததால் அதனை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்ளும் கோரிக்கையுடன் அவர் மனு கொடுக்க வந்தார்.

ஆனால் அவர் கைலி அணிந்து வந்ததால் அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை.வேட்டி கட்டி கூட்டத்திற்கு வருமாறு அறிவுறுத்தினர்.இதனால் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வெளியே நின்ற படி கைலி அணிந்து வந்த விவசாயி காத்திருந்தார்.

பின்னர் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கைலி அணிந்து வந்த விவசாயி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 Oct 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...