/* */

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

110 -விதியின் கீழ் போராட்ட கால இழப்பீடுகளை சரி செய்து ஆணையிடுவதாக அறிவித்த தமிழக முதல்வருக்கு பாராட்டுத் தெரிவித்தார்

HIGHLIGHTS

புதிய ஓய்வூதிய திட்டம்  ரத்து:  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்  கோரிக்கை
X

பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவருமான மகேந்திரன் 

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜேக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவருமான மகேந்திரன் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

2017-ஆம் ஆண்டு முதல் 2019 -ஆம் ஆண்டு வரை வெவ்வேறு காலங்களில் ஆசிரியர்களாலும், அரசுப் பணியாளர்களாலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்ட இழப்பீடுகளை சரி செய்யும் விதமாக சட்டமன்றத்தில் விதி 110 -இன் கீழ் போராட்ட கால இழப்பீடுகளை சரி செய்து ஆணையிடுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். மேலும் பிரதான கோரிக்கையான திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், ஊக்க ஊதிய உயர்வினை தொடர்ந்து வழங்க வேண்டுமெனஎன அவர் வலியுறுத்தினார்.

Updated On: 9 Sep 2021 2:14 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...