/* */

பெரம்பலூரில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் பேரனை தாக்கி கொள்ளை

பெரம்பலூரில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் பேரனை தாக்கி பணம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் பேரனை தாக்கி கொள்ளை
X

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மார்ச் 8 ம் தேதி இரவு அனைவரும் படுத்து தூங்கி உள்ளனர்.

நள்ளிரவு அவர்களது பேரன் அக்ஷய் பாத்ரூம் செல்வதற்காக எழுந்தபோது வீட்டில் மர்ம நபர் ஒருவர் பீரோவில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு இருப்பது தெரிந்து சத்தம் போட்டுள்ளார். அதனையறிந்த திருடன் அக்ஷய்யை கத்தியால் கீறி விட்டு பணத்துடன் மாடிப்படி வழியாக தப்பி ஓடியுள்ளான். இதுகுறித்து சீனிவாசனின் மகன் ராஜா அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு திருடன் குறித்த தகவலை சேகரித்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிந்து நள்ளிரவில் வீடு புகுந்து வாலிபரை தாக்கிய விட்டு பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 9 March 2022 9:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்