/* */

பெரம்பலூர் திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் பெண் உள்பட 6 பேர் கைது

பெரம்பலூரில் திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் பெண் உள்பட 6 பேர் கைது
X

பெரம்பலூர் தனியார் பாரில் திரைப்பட இயக்குனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற அப்துல் ரகுமான் (வயது 40). திரைப்பட இயக்குனரான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ரவுடி பட்டியலிலும் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் இவர் கடந்த 5-ந் தேதி மாலை தனது பிறந்த நாள் மற்றும் திருமண விழாவையொட்டி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலின் மதுபான பாரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடினார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜன் மகன் சரவணன் (22) என்பவர் நேற்று முன்தினம் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.

இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு மேட்டு தெருவை சேர்ந்த மனோகரனின் மகன் அபினாஷ் (22), திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, வடமலை சந்துவை சேர்ந்த சேகரின் மகன் நவீன் (20), நவல்பட்டு பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பிரேம் ஆனந்த் (45), அவரது மனைவி ரமணி (34), பெரம்பலூர் அருகே செஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேலின் மகன் நவீன் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 6 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரணை நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி தரப்புக்கும், கொலையான அப்துல் ரகுமானுக்கும் கட்ட பஞ்சாயத்து செய்வதில் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழக்கில் கைதாகி அழகிரி தற்போது சிறையில் உள்ளதால், அப்துல்ரகுமான் கட்ட பஞ்சாயத்தில் அதிகளவில் ஈடுபட்டதால் அழகிரி தரப்புக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் அழகிரிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வாக்கு குறைந்து வந்ததாம். இதனால் சிறையில் இருக்கும் அழகிரி தனது மனைவி சங்கீதா மூலம் திட்டம் தீட்டி கூட்டாளிகளை வைத்து அப்துல் ரகுமானை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான ரமணி அழகிரியின் தங்கை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கைதான 6 பேரையும் போலீசார் பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-1 மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, போலீசார் அபினாஷ் நவீன், மற்றொரு நவீன், பிரேம் ஆனந்த் ஆகியோரை திருச்சி மத்திய சிறையிலும், ரமணியை திருச்சி மகளிர் சிறையிலும், சிறுவனை இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சங்கீதாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திரைப்பட இயக்குனர் அப்துல் ரகுமான் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி கோர்ட்டில் ஏற்கனவே ஒரு வாலிபர் சரண் அடைந்திருந்தார். இந்தநிலையில், பெரம்பலூர் வரகுபாடியை சேர்ந்த செல்வராஜ் மகன் தன்ராஜ் (31) நேற்று காலை திருச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 9 Jun 2023 1:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!