/* */

108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகிய பெண் குழந்தை: ஊழியர்களுக்கு பாராட்டு

108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தையும், தாயும் நலமுடன் மருத்துவமணையில் அனுமதி.

HIGHLIGHTS

பெரம்பலூர் அடுத்த செங்குணம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி விஜயலட்சுமி (25). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்ததைத் தொடர்ந்து, இவருக்கு வீட்டிலேயே பிரசவ வலி வந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்தனர் .108 ஆம்புலன்ஸில் செங்குணம் பகுதியில் இருந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு விஜயலட்சுமியை அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விஜயலட்சுமிக்கு வலி அதிகமானது. உடனே, 108 ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளர் சுகன்யா மற்றும் ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸிலேயே விஜயலட்சுமிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாயும், குழந்தையும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையின் பிரசவ வார்ட்டில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இரவு நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு, 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த டெக்னீசியன் சுகன்யா , ஓட்டுநர் மதுபாலன் இருவரையும் அதிகாரிகள்,பொதுமக்கள் பாராட்டினர்.

Updated On: 20 July 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்