/* */

நீலகிரியில் 2021-2022 ம் ஆண்டிற்கான திருமண உதவித் தொகை: ஆட்சியர் அறிவிப்பு

தாலிக்கு தங்கம் 600 பயனாளிகளுக்கு வழங்க நிதி ரூ 2,32,50,000, தங்கம் 4.8 கிலோ நீலகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது

HIGHLIGHTS

நீலகிரியில் 2021-2022 ம் ஆண்டிற்கான திருமண உதவித் தொகை: ஆட்சியர்  அறிவிப்பு
X

நீலகிரி மாவட்டத்தில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படித்த பெண்ணுக்கு ரூபாய் 50,000, பட்டப்படிப்பு அல்லாதோருக்கு (பத்தாம் வகுப்பு முதல் பணிரெண்டாம் வகுப்பு பயின்றோர் ரூபாய்25,000 நிதி உதவியாகவும், அதனுடன் 22 காரட் கொண்ட 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

2021-2022-ம் ஆண்டுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் 600 பயனாளிகளுக்கு வழங்க நிதி ரூபாய் 2,32,50,000, தங்கம் 4.8 கிலோ நீலகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை தாலுகாவில் 85 பட்டதாரிகள், 36 பட்டதாரி அல்லாதோர், குன்னூர் தாலுகாவில் 81 பட்டதாரிகள், 28 பட்டதாரி அல்லாதோர், கோத்தகிரி தாலுகாவில் 49 பட்டதாரிகள், 27 பட்டதாரி அல்லாதோர், கூடலூர் தாலுகாவில் 115 பட்டதாரிகள், 179 பட்டதாரி அல்லாதோர் என மொத்தம் 600 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டு உள்ளது. திருமண நிதி உதவியாக 330 பயனாளிகளுக்கு ரூபாய் 50,000 வீதம் ரூபாய் 1,65,00,000, பட்டதாரி அல்லாத 270 பயனாளிகளுக்கு ரூபாய்25,000 வீதம் ரூபாய் 67,50,000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

Updated On: 25 Feb 2022 12:09 PM GMT

Related News