/* */

உதகையில் மழையால் சேதமடைந்த சாலைகள் : சீரமைப்பு பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில், மழையால் சாலைகளில் ஏற்பட்ட மண்சரிவுகளை, அப்புறப்படுத்தும் பணியில், நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

உதகையில் மழையால் சேதமடைந்த சாலைகள் : சீரமைப்பு பணிகள் தீவிரம்
X

உதகை அருகே கீழ் கவ்வட்டி பகுதியில் மண் சரிவு சரி செய்யும் பணி நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. உதகையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.

உதகையில் இருந்து, புதுமந்து செல்லும் சாலையில், மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சாலையில் கிடந்த மண் அகற்றப்பட்டது. உதகை-ஆடாசோலை சாலை, உதகை அருகே கீழ் கவ்வட்டி போன்ற இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினரால் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 18 Nov 2021 12:10 PM GMT

Related News