/* */

குன்னூரில் ஆன்லைன் மூலம் ரூ. 21 லட்சம் மோசடி; இளம்பெண் போலீசில் புகார்

Nilgiri News, Nilgiri News Today- குன்னூரில், ஆன்லைனில் இளம்பெண்ணிடம் ரூ. 21 லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து, சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

குன்னூரில் ஆன்லைன் மூலம் ரூ. 21 லட்சம் மோசடி; இளம்பெண் போலீசில் புகார்
X

Nilgiri News, Nilgiri News Today-ஆன்லைனில் இளம்பெண்ணிடம் ரூ. 21 லட்சம் மோசடி (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- குன்னூரை சேர்ந்த 25 வயது இளம்பெண், ஊட்டி சைபர் க்ரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது,

நான் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பணியாற்றி வருகிறேன். எனக்கு டெலகிராம் மூலம் லிங்க் ஒன்று வந்தது. அந்த லிங்கில் உள்ளே சென்று பார்த்தபோது, அதில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கில், முதலீடு செய்தால் 5 மடங்காக பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தனர்.

இதையடுத்து முதலில் ரூ. 150-யை முதலீடு செய்தேன். பின்னர் எனக்கு ரூ. 1000 கிடைத்தது. இதை நம்பி பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கில் ரூ. 21 லட்சம் வரை செலுத்தினேன். ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி எந்ததொகையும் திரும்ப எனக்கு வரவில்லை. அந்த லிங்கில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, மேலும் பணத்தை செலுத்தினால் மட்டுமே திருப்பி தரமுடியும் என்று கூறினர். இதனால் ஏமாற்றப்பட்டதை நான் அறிந்தேன். எனவே எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண் குறிப்பிட்ட வங்கி கணக்கை முடக்கி வைத்தனர். இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண், சிலரிடம் கடன் வாங்கி ரூ. 21 லட்சம் அதில் முதலீடு செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேபோல ஊட்டியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வீட்டில் இருந்தபடி பணியாற்றும் வேலை உள்ளதா என்று ஆன்லைனில் தேடிபார்த்தார். அவரது முகநூல் பக்கத்தில் வீட்டில் இருந்து பணியாற்ற பகுதிநேர வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதில் வேலையில் சேர்ந்த அந்த பெண்ணிடம் டெலகிராம் மூலம் அனைத்து தகவல்களும் பரிமாறப்பட்டது.

அப்போது அந்த பெண்ணுக்கு சில வங்கி கணக்குகளை அனுப்பி, அந்த கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கூறி, அவர்களே பணத்தையும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளனர். அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த பெண் குறிப்பிட்ட தொகையை சிலரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதில் கர்நாடகாவை சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கும் இருந்துள்ளது. ஏற்கனவே மோசடியால் பாதிக்கப்பட்ட அந்த கர்நாடக பெண், தனது வங்கி கணக்கிற்கு தெரியாத நபரின் கணக்கில் இருந்து பணம் வந்ததால், இதுகுறித்து உடனடியாக கர்நாடக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஊட்டியைச் சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கை கர்நாடகா போலீசார் முடக்கினர். அப்போது அந்த பெண்ணின் ரூ. 3 லட்சம் உள்பட வங்கி கணக்கில் இருந்த ரூ. 6 லட்சத்து 28 ஆயிரம் முடக்கப்பட்டது.

இதுகுறித்து, ஊட்டி பெண் அளித்த புகாரின்பேரில், சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி, இதுகுறித்து கர்நாடக போலீசாருக்கு முறையாக தகவல் தெரிவித்தனர். மேலும் ஊட்டியைச் சேர்ந்த பெண்ணின் பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் இன்ஸ்பெக்டர் பிலிப் கூறுகையில், ஆன்லைன் மூலம் பணத்தை இரட்டிப்பாகி தருகிறோம் என்பன உள்பட பல்வேறு வழிகளில் ஆசைவார்த்தை கூறி பணம் மோசடி செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள், வீட்டில் இருந்து பணியாற்றுபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

Updated On: 26 Jun 2023 2:11 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!