/* */

நாகையில் கொரோனா நிவாரணம் வழங்க டோக்கன் வழங்கும் பணி துவங்கியது

நாகை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

நாகையில் கொரோனா நிவாரணம் வழங்க டோக்கன் வழங்கும் பணி துவங்கியது
X

கொரோனா ஊரடங்கு காரணமாக நிவாரண நிதி 4000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.

நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கியது. ஒருங்கிணைத்த நாகை மாவட்டத்தில் உள்ள 785 நியாய விலை கடைகளிலும், வீடுகளிலும் டோக்கன் விநியோகம் செய்யும் பணிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் காலைமுதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் என மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக வருகின்ற 15 ஆம் தேதி 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 15 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதிக்குள் மாவட்டம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதால் டோக்கன் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On: 10 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’