/* */

நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
X

முழு ஊரடங்கு காரணமாக நாகை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் மற்றும் சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. நாகை பேருந்து நிலையில், பழைய பேருந்து நிலையம் மற்றும் பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.


இதேபோல சுற்றுலா தலங்களான உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்டவைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி பேராலயம் மட்டுமின்றி, பேருந்து நிலையில், கடற்கரை சாலை, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆள் அரவமின்றி காணப்படுகிறது. தொடர்ந்து ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு இடங்களில் போலீசார் கட்டுப்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்