/* */

ரம்ஜான் தினமான 14 ஆம் தேதி ஊரடங்கை தளர்த்த வேண்டும் ; நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள்

ரம்ஜான் தினமான 14ம் தேதி ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் வருகின்ற 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு போட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நோன்பு கடைபிடித்து வரும் இஸ்லாமியர்களுக்கு வருகின்ற 14 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று தளர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிறுபான்மை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவரும், நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சங்கத்தின் தலைவருமான தமீம் அன்சாரி சாஹிப் இன்று அளித்த பேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களின் 5 கடைமைகளின் மூன்றாவது கடமையான நோன்பு கடைபிடித்து வரும் இஸ்லாமியர்கள் வருகின்ற 14 ஆம் தேதி அன்று ரமலான் பண்டிகையை கொண்டாட காலை 6 மணியில் இருந்து 12 மணி வரை தளர்வு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ரமலான் நாளில் இஸ்லாமியர்கள் தங்களது தலையாய கடமையை நிறைவேற்ற கடைவீதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில் தளர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On: 8 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்