/* */

அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

சமூக பரவல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும், குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சி மீட்டர் வழங்க வேண்டும். முன்னால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்..

HIGHLIGHTS

அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்:    முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
X

நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில் :

நாகையில் 5 சதவிகிதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என்பதற்கு சான்றாகும்

எனவே தடுப்பூசி அனைவருக்கும் எளிதாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்தால் மட்டுமே கலநிலவரம் தெரியும் எனவும், உயிர் காக்க வேண்டிய பிரச்சனையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பாரபட்சம் காட்ட கூடாது என்றார்.

மேலும் நாகை மாவட்டத்தில் சமூக பரவல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும் . குடும்ப அட்டைக்கு 2000 ரூபாய் வழங்குவது போல் பல்ஸ் ஆக்சி மீட்டர் குடும்பத்திற்கு ஒன்று வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும் 108 சேவையை அதிகரிக்க வட்டார அளவிலான ஒருங்கிணைப்பை தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்த வேண்டும் எனவும், தற்பொழுது கொரோனா தொற்றால் இறப்பு எண்ணிக்கை அதிகம் ஏற்படுவதாகவும் அதனை மறைத்து தமிழக அரசு குறைவான எண்ணிக்கையை வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் கொரோனா தொற்றின் காரணமாக கர்பினி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூட அரசு தயங்குவதாக வும் தெரிவித்த அவர் ஊரடங்கு மேலும் கடுமையாக்க வேண்டும் எனவும், நோய்த்தொற்றை குறைக்க அதிதீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை விடுத்தார்.

Updated On: 25 May 2021 4:11 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...