/* */

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு வீடுகள் தோறும் சென்று தொற்று பரிசோதனை : அமைச்சர் மெய்யநாதன்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க 7 லட்சம் பேருக்கு வீடுகள் தோறும் சென்று பரிசோதனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதான் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம்  மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு வீடுகள் தோறும் சென்று தொற்று பரிசோதனை : அமைச்சர் மெய்யநாதன்
X

நாகப்பட்டினம் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்குறிய ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் பிரவின்நாயர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொற்று கட்டுக்குள் கொண்டுவர சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் கிராமங்கள் தோறும் சென்று களப்பணி ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நாகை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக 7 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை அளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மாவட்டத்தில் உள்ள இரண்டு லட்சம் வீடுகளுக்கும் நாளை முதல் நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றார்.

Updated On: 6 Jun 2021 7:07 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை