/* */

நாகையில் அதிக விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் ஊழியர் பணியிடை நீக்கம்

நாகையில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

நாகையில் அதிக விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் ஊழியர்  பணியிடை நீக்கம்
X

நாகையில்  ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாஸ்மாக் மது பான கடை.

தமிழ்நாடு மாநில வாணிப கழகம், திருச்சி பறக்கும் படையினர் கடந்த மாதம் 23ம் தேதி நாகை நகர டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நாகை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடை எண் 5605-ல் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கடை மேற்பார்வையாளர் பொறுப்பு வகித்த ரவி மற்றும் விற்பனையாளர்கள் முத்தரசன், தேவிசயாள் பிள்ளை ஆகிய 3 பேரை பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் நாகை மாவட்ட மேலாளர் ரவி இன்று உத்தரவிடப்பட்டார்.

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவி எச்கரிக்கை விடுத்துள்ளார்.


Updated On: 6 Oct 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு