/* */

கிருஷ்ணகிரி: 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆட்சியர் வேண்டுகோள்

அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி: 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆட்சியர் வேண்டுகோள்
X

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானுரெட்டி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசுஎடுத்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். இதனால் நோய் வீரியம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போதுஉருமாறிய கொரோனா வைரஸ் எனப்படும் ஒமிக்ரான் வைரசின் பாதிப்பு நாடு முழுவதும் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் இந்த வைரஸ் அதிகம் வீரியம் கொண்டு அதிகமாக பரவும் என கூறப்படுகிறது. எனவே இந்த வைரஸின் வீரியத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றால் மாவட்ட மக்கள் ஏற்கனவே கொடுத்த ஒத்துழைப்பு போல தற்போதும் தரவேண்டும்

மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாகவும் வேண்டுகோள் என்னவென்றால் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் முதல் தவணை இரண்டாம் தவணை செலுத்தாதவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் போதுமான இருப்பு தடுப்பூசி மருந்து உள்ளது.

பொது இடங்களில் வருவோர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது பொதுசுகாதார சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

கொரோனா நோய் பாதிப்புள்ளவர்கள் வெளியில் சுற்றுவது மற்றும் பயணங்கள் மேல் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 5 Jan 2022 2:45 PM GMT

Related News