/* */

பெண்கள் பாராட்டு..!

நகரப் பேருந்தில் இலவசம், பெண்கள் பாராட்டு..!

HIGHLIGHTS

பெண்கள் பாராட்டு..!
X

கரூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து நகர பகுதிகளிலும் இன்று காலை முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, இன்று முதல் தமிழகம் முழுவதும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற நேற்று அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் இன்று காலை முதல் கரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.



குறிப்பாக தொழில் நகரமான கரூருக்கு, கரூர் மாவட்டம் முழுவதும் இருந்து அதிக அளவில் பெண்கள் பணிக்கு வருகின்றனர். இவர்கள் இங்குள்ள கொசுவலை உற்பத்தி தொழிற்சாலை, வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பெண்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். இவர்களிடம் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு பெருத்த வரவேற்பு பெற்றுள்ளது.

காலை முதலே மாவட்டம் முழுவதும் இயங்கும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு பேருந்திலும் எவ்வளவு பெண் பயணிகள் ஏறி பயணிக்கின்றனர். என்ற புள்ளி விவரங்களை மட்டும் எடுக்கும்படி போக்குவரத்து கழகம் சார்பில் நடத்துனருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஒவ்வொரு எவ்வளவு பெண்கள் பயணிக்கின்றன என்பது குறித்து புள்ளி விவரங்களை மட்டும் நடத்த எடுத்து வருகின்றனர்.

இன்று காலை முதலே கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கொசுவலை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வந்த பெண்கள் நகரம் பேருந்தில் இலவசமாக பயணித்து வந்தனர் இதுகுறித்து பெண் ஒருவர் தெரிவிக்கையில், முதல்வரின் இந்த அறிவிப்பு பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் ஏனென்றால் பெண்கள் தினசரி ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பேருந்துக்காக செலவிட வேண்டியிருக்கிறது அந்த தொகை மிச்சமாகும். குடும்பம் நடத்துவதற்கு பேருந்து கட்டணத்திற்கு செலவழித்த தொகையை பயன்படுத்த முடியும் என தெரிவித்தனர்.

Updated On: 8 May 2021 7:00 AM GMT

Related News