/* */

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய பூங்கா - நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாடு

நாகர்கோவிலில் பயன்பாடற்று கிடந்த இடத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய பூங்கா அமைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்தது.

HIGHLIGHTS

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய பூங்கா - நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாடு
X

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ்நகர் பகுதியில் பராமரிப்பின்றி காணப்பட்ட பகுதியில் பூங்கா அமைத்து தர வலியுறுத்தி அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி அப்பகுதியில் மரக்கன்றுகள் அமைத்து பூங்கா உருவாக்கும் பணியை தொடங்கி வைத்தது, இந்த திட்டத்தை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன, நடப்பட்ட மரக்கன்றுகளை வரும் நாட்களில் ராஜீவ் நகர் குடியிருப்போர் சங்கத்தின் மூலம் பராமரிக்கப்படவுள்ளது.

வரும் நாட்களில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பராமரிப்பின்றி இருக்கும் பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளும் ஏதுவான இடங்களில் குறுங்காடுகள் அமைக்கும் பணிகள் துவங்கப்படும் என தெரிவித்த மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி பகுதிகளில் மரம் நடும் ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் தன்னார்வ அமைப்புகள் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் கேட்டு கொண்டார்.

Updated On: 16 Aug 2021 4:17 AM GMT

Related News