/* */

நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர் எச்சரிக்கை

நாகர்கோவில் மாநகராட்சி-நடமாடும் காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார் -மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

HIGHLIGHTS

நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர் எச்சரிக்கை
X

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார் வருகிறது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் வாகனங்கள் பறிமுதல் மற்றும் காவல்துறையினர் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கார்மல் மேல்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வைத்து நடைபெறும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் கிருஷ்ணலீலா மற்றும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் கிங்ஷால்ஆகியோர் உடனிருந்தனர்.18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி முகாம்களில் இன்று 3343 நபர்களுக்கும் இந்நாள்வரை 12 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இம் முகாம்களில் அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்றைய கொரோனோ தடுப்பூசி முகாம்களில் போக்குவரத்து துறை, பணியாளர்கள், தொழில்பேட்டை பணியாளர்கள், மற்றும் பெட்ரோல் நிலைய பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி பெற்ற வியாபாரிகள் 170 வாகனங்களை காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது காய்கறிகளை வியாபாரிகள் அதிக விலை வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன் அடிப்படையில் காய்கறி மொத்த வியாபாரிகளின் அவசரக்கூட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் தலைமையில் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.இதில் வேளாண்மை துறை இணை இயக்குனர் மூலமாக அங்கீகரிக்கும் விலைகளிலேயே மொத்த விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூபாய் 100 மற்றும் 200 ரூபாய் தொகுப்புகளாக மட்டுமே வழங்க வேண்டும் எனவும் அதனையே சில்லறை வியாபாரிகளும் தொகுப்புகளாக மட்டுமே பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வேளாண்மை துறை நிர்வாகம் செய்யும் விலையை விட அதிக விலையில் விற்பனை செய்தாலோ மாநகர பகுதிகளில் உரிய அனுமதி இன்றி விற்பனை செய்தாலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சற்குண வீதி குறுக்குச்சாலை சென்மேரிஸ் தெரு ஞானம் நகர் நேதாஜி சாலை அந்தோணி தெரு தெரு சுப்பையா காலணி மற்றும் பார்க் ரோடு இந்து காலனி ஆகிய ஏழு பகுதிகள் இன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 May 2021 4:35 PM GMT

Related News