/* */

சர்ச்சை பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், இந்து முன்னணி கோரிக்கை

குமரி சர்ச்சை பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

சர்ச்சை பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், இந்து முன்னணி கோரிக்கை
X

சர்ச்சை பேச்சு பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்தவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்துக்கள், இந்து மதம், இந்து கடவுள்கள், இந்து மத நம்பிக்கை குறித்து அவதூறான கருத்துக்களை பேசப்பட்டன.

மேலும் பாரத மாதா, பாரத பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர்கள் ஆகியோர் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசினார்.

இதனை தொடர்ந்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் ஸ்டீபன் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின்னர் பாரத பிரதமர் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு சவால் விடும் வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் ஸ்டீபன் ஆகியோர் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Updated On: 26 July 2021 1:15 PM GMT

Related News