/* */

அண்ணன் பரதேசி, தங்கை மீனாட்சி அடுத்தடுத்து இறப்பு ஏன் தெரியுமா?

அண்ணன் பரதேசி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை விட்ட தங்கை மீனாட்சியால் கன்னியாகுமரியில் சோகம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

அண்ணன் பரதேசி, தங்கை மீனாட்சி அடுத்தடுத்து இறப்பு ஏன் தெரியுமா?
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பரதேசி (90), நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருக்கு இரண்டு தங்கைகள் உள்ள நிலையில் இளைய தங்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். மூத்த தங்கையான மீனாட்சி (85) ஆரல்வாய் மொழி பகுதியில் உள்ள காந்தி நகரில் மகளுடன் வசித்து வந்தார்.

அண்ணனும் தங்கையும் ஒருவருக்கு ஒருவர் அதிக பாசம் வைத்து இருந்தனர். இந்நிலையில் பரதேசி உடல் நல குறைவு காரணமாக இறந்தார். இதனை அறிந்த தங்கை மீனாட்சி அங்கு சென்று அண்ணனின் உடல் மீது விழுந்து புரண்டு கண்ணீர் மல்க அழுதார்.

அதன் பின்னர் மீனாட்சி சரிவர உணவுகளை உட்கொள்ளாமல் தன் அண்ணனின் நினைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அண்ணன் பரதேசியின் நினைவு சடங்கு நேற்று (வியாழக்கிழமை ) நடைபெற்ற நிலையில் மீனாட்சி உடல் நிலை திடீர்என்று மோசமாகி பரிதாமாக உயிர் இறந்தார்.

அண்ணன் இறந்து ஒரு வாரதிற்குள் தங்கையும் இறந்த இந்த சம்பவம் அவர்களின் சகோதர பாசத்தை பறைசாற்றியதோடு, ஆரல்வாய் மொழி பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 11 Feb 2022 6:21 AM GMT

Related News