/* */

கைவிரித்த திரு ஓணம் விற்பனை, வேதனையின் உச்சத்தில் குமரி வியாபாரிகள்

குமரியில் திருவோணம் பண்டிகை விற்பனை முடங்கியதால் வியாபாரிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

HIGHLIGHTS

கைவிரித்த திரு ஓணம் விற்பனை, வேதனையின் உச்சத்தில் குமரி வியாபாரிகள்
X

திருஓணம் பண்டிகையில் வெறிச்சோடிய குமரி

கேரளா மக்களின் முக்கிய பண்டிகையான ஓணப்பண்டிகை கடந்த 11 ஆம் தேதி தொடங்கி இன்று திருவோணம் நாளில் முடிவு பெற்றது.

திருவோணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும் கேரளாவில் கொரோனா கட்டுபாடுகளை அம்மாநில அரசு அறிவித்தது.

அதன்படி கொரோனா தடுப்பூசி ஒரு டோஸாவது எடுத்து கொண்டவர்கள் தான் பொது இடங்களுக்கு வந்து பொருட்கள் வாங்க வர வேண்டும் என்றும் முறையாக முககவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

இதனை கண்காணிக்க முக்கிய சந்திப்புகளில் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர், இதன் காரணமாக தமிழக கேரள எல்லை பகுதியில் பொதுமக்கள் யாரும் பொருட்கள் வாங்க வராததால் வணிக நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஓணப்பண்டிகை விற்பனைக்காக துணிக்கடைகளில் புது புது கலெக்ஷன்கள் எடுத்து வைத்து கடை வியாபாரிகள் விற்பனை ஆகும் என்று எதிர்பார்த்து இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதே போல் ஓணப்பண்டிகை நாளில் அறுசுவை உணவு சமைத்து குடும்பங்கள் ஒன்றிணைந்து உணவு சமைத்து சாப்பிட காய்கறி பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகமாக வருவார்கள் என்று நம்பி காய்கறி கடைகள் அமைத்தவர்களும் ஆட்கள் இன்றி ஏமாற்றம் அடைந்தனர்.

இதனிடையே கொரோனா காரணமாக ஓணப்பண்டிகை கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Updated On: 21 Aug 2021 12:45 PM GMT

Related News