/* */

ஓரகடம் : ₹15லட்சம் மதிப்பிலான டயர்கள் மீட்பு - ஆறு பேர் கைது

ஒரகடம் பகுதியில் 15 லட்சம் மதிப்பிலான டயர்களை திருடி விற்ற புகாரில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஓரகடம் : ₹15லட்சம்  மதிப்பிலான டயர்கள் மீட்பு -   ஆறு பேர் கைது
X
பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் அப்போலோ டயர் நிறுவனத்தின் வேர்ஹவுஸ் குடோன் நடத்திவருகிறார்.

கடந்த 10ஆம் தேதி லிங்கேஸ்வரன் என்பவர் குடோனில் இருந்து போலி பில் தயார் செய்து லாரி ஒன்றில் 105 டயர்களை ஏற்றி சென்றுள்ளார்.

பின்னர் இந்த பில் போலியானது என தெரிய வந்ததைத் தொடர்ந்து ஒரகடம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலும் ,

ஒரகடம் காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமார் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது குடோனில் பணிபுரிந்து வந்த பிரேம், அவருடைய மாமா லியோபவுல் ராஜ் , லிங்கேஸ்வரன் ஆகியோர் இணைந்து லாரி ஓட்டுநர் ரஹீம் மூலம் இச் செயலை செய்ததாக தெரிய வந்தது.

இவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் கடத்தப்பட்ட டயர்களை ராணிப்பேட்டை மற்றும் வேலூர் பகுதியில் ஜாகீர் மற்றும் தஸ்கீர் ஆகிய கடை உரிமையாளரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து விற்பனை செய்த டயர்களை பறிமுதல் செய்து அவர்கள் 6பேர் மீதும் 6 பிரிவுகள் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட டயர்களின் மதிப்பு ரூபாய் 15 லட்சம் என தெரியவந்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே குடோனில் இருந்து 3,750 டயர்கள் கடத்தப்பட்டதும் அப்போது அங்கு வேலை பார்த்த லியோபவுல்ராஜ் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது உறவினர் உதவியுடன் மீண்டும் இச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Updated On: 18 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...