/* */

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸார் மவுன போராட்டம்

கூட்டணி தர்மத்தை மீறியதாகக்கூறி, மன்ற தலைவர் பதவியை திமுக ராஜினாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்  நினைவிடத்தில் காங்கிரஸார் மவுன போராட்டம்
X

ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.  

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வார்டுகளில் வெற்றி பெற்றன. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மன்றத்திற்கு, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ் என்பவரின் மனைவி செல்வமேரி என்பவர் போட்டியிட்டார்.

பேரூராட்சி மன்ற தலைவர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனிடையே, திமுகவின் நகர செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தி என்பவர், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செல்வமேரிக்கு எதிராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு கூட்டணி தர்மத்தை மீறி வென்றவர்கள், உடனடியாக பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து தன்னை சந்தித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், திமுக தலைமை கூறியதுபோல் கூட்டணி தர்மத்தை மீறியதாலும்,கூட்டணி தர்மத்தை பாதுகாக்க சேர்மன் பதவியில் இருந்து உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரி உள்ளிட்ட திரளான காங்கிரசார், சுமார் 10நிமிடங்கள் வரை தியானத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு ராஜீவ் காந்தி நினைவிடத்தின் நுழைவு வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் அங்கு பாதுக்காப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

Updated On: 7 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!