/* */

ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு பகுதிகளில் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா ஆய்வு

தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் பல்வேறு பணிகள் மற்றும் மருத்துவமனை , அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு பகுதிகளில் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா ஆய்வு
X

ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நபரிடம் நலம் விசாரித்த தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

மணப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கொளப்பாக்கம் கால்வாய் -2 நடைபெறும் பணிகளை பார்வையிட்டு, கெருகம்பாக்கம் சாலையில் நடைபெறும் சிறு பாலம் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட பின்பு காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கம் ஊராட்சியில், கொளப்பாக்கம் கால்வாய் -1லிருந்து ஓடை வரை கொளப்பாக்கம் - பொழிச்சலூர் சாலையில் மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணியை மழைக்கு முன் விரைந்து முடிக்குமாறு நீர் வளத்துறை அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

மணப்பாக்கம் கால்வாயில் வெள்ளை நீரை கட்டுப்படுத்த கதவணைகள் அமைக்குமாறும் நீர் வளத்துறை அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். இப்பணியால் போரூர் ஏரியின் அருகில் கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம் மற்றும் மணப்பாக்கம் ஊராட்சியில் வெள்ளநீர் சூழாமல் அடையார் ஆற்றினை சென்றடையும்.


இதனை தொடர்ந்து, குன்றத்தூர் ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலை இடையே அமைக்கப்பட்டு வரும் கீழ்மட்ட கால்வாய் பணிகளை பார்வையிட்டார் .

குன்றத்தூர் ஒன்றியம், படப்பையில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு மருந்துகள் இருப்பு நிலையையும், வெளிப்புற நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

செரப்பணஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ரூ.69.71 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 4 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டு, திருப்பெரும்புதூர் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தினையும் பார்வையிட்டு, உணவு தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்


இதனை தொடர்ந்து திருப்பெரும்புதூர் ஒன்றியம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை பார்வையிட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்து, குறைகளை கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்ட பணிகளையும் தலைமைச் செயலாளர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 17 Oct 2023 4:03 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்