/* */

நகராட்சி தேர்தல் : 4 கணவன் & மனைவி ஜோடிகள் வெற்றி

குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் திமுக, அதிமுக, மதிமுக, சார்பாக போட்டியிட்ட கணவன்கள் மற்றும் மனைவிகள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

நகராட்சி தேர்தல் : 4 கணவன் & மனைவி ஜோடிகள் வெற்றி
X

குன்றத்தூர் நகராட்சியில் வெற்றி பெற்ற சத்யமூர்த்தி மற்றும் அவரது பானு சத்யமூர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று விடைபெற்றது. இதில் குன்றத்தூர் நகராட்சியில் திமுக சார்பில் 18ஆவது வார்டில் போட்டியிட்ட சத்தியமூர்த்தியும், 17ஆவது வார்டில் போட்டியிட்ட சத்தியமூர்த்தியின் மனைவி பானுசத்திமூர்த்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே போல் மாங்காடு நகராட்சியில், மதிமுக சார்பில் 9ஆவது வார்டில் போட்டியிட்ட முருகனும், 6ஆவது வார்டில் போட்டியிட்ட முருகனின் மனைவி சுமதியும் வெற்றி பெற்றனர். மாங்காடு நகராட்சியில் அதிமுக சார்பில் 12ஆவது வார்டில் போட்டியிட்ட ரூசேந்திரகுமாரும், 16ஆவது வார்டில் போட்டியிட்ட ரூசேந்திரகுமாரின் மனைவி வாணியும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல், மாங்காடு நகராட்சியில் திமுக சார்பில் 25ஆவது வார்டில் போட்டியிட்ட ஜபருல்லாவும், 27ஆவது வார்டில் போட்டியிட்ட ஜபருல்லாவின் மனைவி யாஷ்மினும் வெற்றி பெற்றுள்ளனர். குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் மட்டும் 4 கணவன்களும் அவர்களது மனைவிகளும் வெற்றி பெற்ற ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

Updated On: 23 Feb 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  2. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  5. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  6. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  7. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  10. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...