/* */

லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது.

உத்திரமேரூர் வட்டம், பினாயூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற நபருக்கு பட்டா உட்பிரிவுக்கு 5ஆயிரம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது.
X

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மாரியப்பன் மற்றும் கவியரசன்

பட்டா உட்பிரிவுக்கு ரூ 5ஆயிரம் லட்சம் வாங்கிய விஏஓ மற்றும் கிராம உதவியாளர் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை விசாரணை நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம், பினாயூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் தன்னுடைய 57 சென்ட்க்கு இடத்திற்கு பட்டா மாற்றவும், உட்பிரிவு செய்யவும் கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்துள்ளார்

பினாயூர் கிராம நிர்வாக அலுவலர் விடுமுறையில் உள்ளதால் அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலராக செயல்பட்டு வரும் (பினாயூர் பொறுப்பு விஏஓ) மாரியப்பன் என்பவர் குமாரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் தகவல் அளித்ததின் பேரில், இன்று காலை வழக்கு பதிவு செய்து அரும்புலியூர் வருவாய்த்துறை அலுவலகம் அருகே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கிராம நிர்வாக உதவி அலுவலர் கவியரசன் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்தனர்.

மாரியப்பன் மற்றும் கவியரசன் ஆகியோரிடம் துணை காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் தலைமையில் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் கீதா ஆகியோர் விசாரணை செய்து வருகிறார்கள். லஞ்சம் வாங்கி பிடிபட்ட நிகழ்வு அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் இச்சம்பவத்தை காண கூடினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல்வேறு அலுவலகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்திருந்தும் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது

Updated On: 16 Aug 2023 1:00 PM GMT

Related News