/* */

கொத்தனார் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்

கடந்த 12 ஆம் தேதி வேலைக்கு சென்ற கொத்தனார் சேகர் மறுநாள் சந்தேகத்துக் கிடமான முறையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது

HIGHLIGHTS

கொத்தனார் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்
X

பைல் படம்

காஞ்சிபுரம், பூக்கடைசத்திரம், செட்டிகுளம் சிதார் தெரு பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் சேகர். இவர் கடந்த 12ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் மறுநாள் பாலு செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான குண்டுகுளம் பகுதியில் சந்தேக மரணம் என்கிற முறையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது இறந்த நபர் சேகர்‌ என்பது உறுதியானது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையின் சேகர் மனைவியிடம் முதல் கட்ட விசாரணையில் அவரது நண்பர் திருப்பருத்திகுன்றம் பகுதியை சேர்ந்த முரளி என்பவர் அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து முரளியை விசாரித்த போது தனது நண்பர் தயாரிக்கும் பகுதியை சேர்ந்த அருள் என்பருடன் இணைந்து மது அருந்திய போது சேகரை தாக்கியது அவர் மயக்கம் அடைந்ததால் அந்த இடத்திலேயே விட்டு வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சேகர் தன்னிடம் ரூபாய் 10,000 முன்பணமாக பெற்றுக் கொண்டு கொத்தனார் வேலைக்கு வருவது இல்லை என்பதும் அதனை திருப்பி கேட்டும் தர மறுத்து காலம் தாழ்த்தி வந்ததால் அன்று அவரை அழைத்துக் கொண்டு கீரை மண்டபம் பகுதியில் பணி முடித்து குண்டு குளம் பகுதியில் மது அருந்தியபோது வாய் தகராறு ஊற்றி இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து பாலுசெட்டி காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற வழக்கை , கொலை வழக்காக மாற்றப்பட்டு முரளி மற்றும் அருள் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


Updated On: 18 Sep 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?