/* */

நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை படுஜோர்

கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை பெரும் உயர்வை கண்ட நிலையில் இன்று மீண்டும் பத்து ரூபாய் உயர்வு என்று கிலோ ஒன்றுக்கு ரூபாய் 160க்கு விற்கப்படுகிறது.

HIGHLIGHTS

நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை படுஜோர்
X

சின்ன காஞ்சிபுரம் யாக சாலை மண்டபத் தெருவில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடையில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூபாய்60 விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்த போது

கடந்த ஒரு மாத காலமாகவே காய்கறி பட்டியலில் உள்ள தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. போதிய விளைச்சல் இன்மை காரணமாகவும், இடையில் பெய்த மழையில் அனைத்து செடிகளும் அழிய நிலையை இது போன்ற விலை உயர்வு ஏற்பட்டது.

நாள்தோறும் விலைகளில் உயர்வு மாற்றம் ஏற்பட்ட நிலையில், தக்காளி பயன்பாடு பொதுமக்கள் இடையே பெரிதும் குறைந்தது. ஏழை எளிய நடுத்தர மக்கள் அன்றாட பயன்பாட்டில் தக்காளி மிக முக்கியமானது என்பதால் அதனை குறைந்த அளவிலே பயன்படுத்தி வேலை கட்டுப்படுத்த பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் , விலை வியர்வை கட்டுப்படுத்த அரசு தவறுகிறது என கடும் விமர்சனங்களையும் முன் வைத்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை சார்பில் நியாய விலை கடைகளில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 60 என விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில், சுழற்சி முறையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஐந்து நியாய விலை கடைகளில் நாள்தோறும் தக்காளி விற்பனை செய்யப்பட்டும் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் நடமாடும் தக்காளி விற்பனை நிலையமும் அமைக்கப்பட்டு ஜூலை ஆறாம் தேதி முதல் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து . இதனால் சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியிலேயே இன்று தக்காளி ரூபாய் 10 உயர்வு கண்டு 160 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

யாக சாலை மண்டபத் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று தக்காளி பொதுமக்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 60 வீதம் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள செட்டி தெரு ஒன்று மற்றும் இரண்டு எண் கொண்ட இரண்டு நியாயவிலைக் கடை மற்றும் நயினார் தெருவில் உள்ள நியாய விலை கடை உள்ளிட்ட 5 இடங்களில் இன்று காலை தக்காளி விற்பனை தொடங்கிய சில நிமிடங்களே காத்திருந்த பொதுமக்கள் தக்காளியை வாங்கி மகிழ்ச்சியுடன் சென்றனர்.

தமிழக அரசு விரைந்து விலை உயர்வை கட்டுப்படுத்தி நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் பெண்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 29 July 2023 4:30 AM GMT

Related News