/* */

தொழிற்சாலை நகரங்களை உருவாக்கியது திமுகதான் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடந்த திமுக ஆட்சியில் தான் தொழிற்சாலை பகுதிகள் அதிகம் உருவாக்கியதாகவும் , தொழிற்சாலையினை புத்தகமாக பார்க்காமல், வாழ்க்கையாக பார்த்து, தற்போதைய திமுக அரசு செயல்படுவதாகவும், தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தொழிற்சாலை நகரங்களை உருவாக்கியது திமுகதான்  : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
X

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் 1 கோடியாவது காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் 1 கோடியாவது கார் வெளியீட்டு விழா தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு ஒரு கோடியாவது காரை வெளியிட்டு அந்நிறுவனத்துக்கு வாழ்த்துக்களை எழுதி வாழ்த்துரை வழங்கினார்.

அதன்பின் சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கிய போது , தமிழகத்தில் கடந்த 1996 க்கு பிறகு தான் பல்வேறு தொழிற்சாலைகள் சென்னையை சுற்றி உருவாகியது இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் டாக்டர் கலைஞர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையும் சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்னையிலிருந்து சோழிங்கநல்லூர் வரை பல தொழிற்சாலைகளை ஏற்படுத்தி சாதனைகளை படைத்தவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

தெற்காசியாவிலேயே மிகுந்த தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக மாற்ற இந்த அரசு பாடுபட்டு வருவதாகும், அதற்காக அடிப்படை திட்டமிடலை இந்த அரசு தொடங்கியுள்ளது உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று அமைத்து உள்ளது.

இது மட்டுமில்லாமல் தொழிற்சாலைகளுக்கு நம்பிக்கை தரும் மாநிலமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியும் இதுகுறித்த ஊடகங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனைக் குழுவின் ஆலோசனைகளைப் பெற்று தமிழக அரசு செயல்படும் எனும் புதிய திட்டங்களை வகுக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது இப்படி பல்வேறு நிலைகளை தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க முதலீடு செய்ய உண்டாய் போன்ற நிறுவனங்கள் மற்றும் வழக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

தொழிற்சாலைகள் தொடங்க சாதனை பகுதியாக அனைத்து நகர மாவட்டங்களையும் மாற்ற வேண்டும் எனும் நோக்கில் இந்த அரசு செயல்பட்டு தொழிற்சாலையை ஊக்கப்படுத்தி வருகிறது தொழிற்சாலைகள் ஒரு புத்தகமாக பார்க்காமல் வாழ்க்கையாகவே இந்த அரசு பார்ப்பதால் அனைத்தும் சிறப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஊரக தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஹூண்டாய நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.க்

Updated On: 30 Jun 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  2. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  3. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  4. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  5. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?