/* */

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை அனுமதி பெற காத்திருந்த விழா அமைப்பாளர்கள்

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அனுமதி பெற அமைப்பாளர்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை அனுமதி பெற காத்திருந்த விழா அமைப்பாளர்கள்
X

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை அமைப்பதற்கான அனுமதி பெற வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த விழா அமைப்பாளர்கள்.

இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அவ்வகையில் விநாயகர் சிலை வைத்து பொது இடங்களில் வழிபட காவல்துறை தீயணைப்புத்துறை மற்றும் வருவாய் துறை அனுமதி பெற்று அதற்குரிய ஆவணங்களை விண்ணப்ப படிவத்துடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து அனுமதி பெற்ற பின்பு சிலை வைக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் தாலுகா அலுவலகங்களுக்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் உள்ள கிராமங்களில் சிலை வைக்க ஏராளமானோர் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த இறுதிக்கட்ட நேரத்தில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விழா அமைப்பாளர்கள் அனுமதி கடிதத்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இணைப்புத் துறையினர் அனுமதி அளிப்பதில் காலதாமதத்தால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட விழா அமைப்பாளர்கள் அனுமதி கிடைத்ததற்காக குவிந்ததால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.


Updated On: 31 Aug 2022 5:59 AM GMT

Related News