/* */

கை கொடுத்த மழை நீர் தொட்டிகள், காஞ்சிபுரம் சாலைகளில் நீர் தேங்கவில்லை

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டதால் சாலையில் நீர் தேக்கம் இல்லாமல் இருந்தது

HIGHLIGHTS

கை கொடுத்த மழை நீர் தொட்டிகள், காஞ்சிபுரம் சாலைகளில் நீர் தேங்கவில்லை
X

மழைநீர் வாய்க்கால்களைஆய்வு செய்த காஞ்சிபுரம் மேயர்

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளில் உள்ளடக்கி பொதுமக்கள் தேவையான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த காலங்கள் கனமழை பெய்த போது முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து சாலையில் செல்லும், மேட்டு தெரு, விளக்கடி கோயில் தெரு, ரயில்வே சாலை என பல பகுதிகளில் குளம் போல் தேங்கி வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் தெரிந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.

கடந்த 2015 கனமழை பெய்த போது, வேகவதி ஆற்று மழை நீர் நகருக்குள் உட்புகுந்து பொதுமக்களுக்கு பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியது.

இது போன்ற நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் அனைத்து பகுதிகளிலும் பருவ மழை முன்னேற்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தது. தற்போது துவங்கி உள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நவம்பர் 1 முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகம் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் தற்போது வரை 42 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது

இனிமேல் காஞ்சிபுரம் நகரில் வடகிழக்கு பருவமழைக்கு நீர் தேங்கா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சிக்கு மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல. சுப்பிரமணியன் பல்வேறு ஆலோசனை வழங்கி மாவட்ட ஆட்சியருக்கு கண்காணிக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்படி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை கணக்கெடுத்து அதை சரி செய்ய மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மாமன்ற கூட்டத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள திருக்கோயில் குளங்களை கணக்கெடுத்து சாலையில் செல்லும் நீரை குளங்களுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் நகரில் கடந்த ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அனைத்தும் செயற்பொறியாளர் தலைமையிலான குழு கணக்கெடுப்பு நடத்தி, அதில் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளை, நீக்கி மழை நீர் கால்வாய் அனைத்தும் திருக்குளங்களுக்கு அனுப்ப சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் வெற்றி கண்ட மாநகராட்சி நகர் முழுவதும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் ஈடுபட்டது.

அது தற்போது பெருமளவில் காஞ்சிபுரம் நகரில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக சாலையில் தேங்கிய அனைத்து மேலும் இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, சில இடங்களில் திருக்கோயில் குளங்களுக்கும் செல்வது பார்க்கையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

காஞ்சிபுரம் அருகில் முக்கிய பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நிலையில் தற்போது கனமழை பெய்தாலும் சாலையில் நீர் தேங்காது அளவு தற்போது முன்னேற்பாடுகள் மேற்கொண்ட மாநகராட்சியின் பணிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 11 Nov 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!