/* */

அதிமுகவின் வாரிசுகள் பொதுமக்களே! கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்

HIGHLIGHTS

அதிமுகவின் வாரிசுகள் பொதுமக்களே! கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்த போது

அதிமுக கட்சியின் வாரிசுகள் பொதுமக்களே.. காஞ்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் தேரடி வீதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.


அதற்கு முன்பாக பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேரடி வீதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட போது அவர் கூறியதாவது: தற்போது அரசியல் கட்சிகள் அனைத்திலும் வாரிசு உள்ள நிலையில் அதிமுகவில் உள்ள நிறுவனர் தொடங்கி அனைத்து தலைவர்கள் பொதுமக்களையே வாரிசாக எண்ணி பல்வேறு நல திட்ட உதவிகளை கடத்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுக மூன்றாக உடைந்து விட்டது, நான்காக உடைந்துவிட்டது என கூறிவரும் நிலையில் அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் காஞ்சிபுரம் அதிமுகவின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தற்போது இந்த பிரச்சார கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வளர்மதி சோமசுந்தரம் கழக அமைப்பு செயலாளர்களும் வாலாஜாபாத் கணேசன், செங்கல்பட்டு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 April 2024 1:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!