/* */

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் , பரமபதவாசல் கொண்ட ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
X

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றம்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பரமபத வாசல் கொண்ட திருத்தலமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் மற்றும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது.

அவ்வகையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பரமபத வாசல் கொண்ட திருக்கோயிலான ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் ரங்கசாமி குளம் அருகே அமைந்துள்ளது.

எட்டு கைகளுடன் பிரம்மாண்டமாக நின்ற கோலத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் எம்பெருமானை நாள்தோறும் ஆயிரக்கணக்கான தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்திருக்கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாத இருந்த நிலையில் தற்போது மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு இந்த வருடம் நடைபெறுகிறது.

இன்று அதிகாலை 7 மணியளவில் கொடிமரம் அருகே ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் எழுந்தருள கொடி மரத்தில் கருட உருவம் குறித்த பிரம்மோற்சவ கொடி பட்டாச்சார்யார்களால் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சபர வாகனத்தில் வீதி உலா வந்த எம்பெருமானை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் உற்சவர் மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள உள்ளார்.

Updated On: 23 April 2024 10:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!