/* */

காஞ்சிபுரத்தில் 2,118 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் 2,118 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 2,118 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
X

காஞ்சிபுரம் குமரக் கோட்டம் முருகன் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் 2,118 இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் இதுவரை 9லட்சத்து 20 ஆயிரத்து 575 பேருக்கு முதல் தவணையும், 7லட்சத்து 36 ஆயிரத்து 58 பேருக்கு இரண்டாவது தவணையும் மாவட்ட நிர்வாகம் நடத்திய முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், புதிய வகை கொரோனா வைரஸ் BA4, BA5 strain மூலம் மக்களுக்கு கொரோன காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று (ஞாயிறு) ஒருநாள் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யட்டது.

இந்த நடமாடும் சிறப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2118 இடங்களில் நடத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், திரையரங்கம் , தேசிய, மாநிில நெடுஞ்சாலை என அனைத்து இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோன நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Updated On: 12 Jun 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...